தொகுதி பங்கீடு - 4+1 கேட்கும் த.மா.கா..? ஒப்புக்கொள்ளுமா பாஜக..?
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதை உறுதிசெய்துள்ளது தமிழ் மாநில காங்கிரஸ்.'
கூட்டணி
அதிமுக - பாஜக கூட்டணி முறிவை தொடர்ந்து தற்போது புதிய தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு வருகின்றது.
இந்த கூட்டணியில் தற்போது வரை பிரதான கட்சியாக இடம்பெற்றிருப்பது தமிழ் மாநில காங்கிரஸ் மட்டுமே. மற்ற இதர பிற சிறு சிறு கட்சிகளை ஒன்றிணைத்துள்ள பாஜகவின் கூட்டணிக்கு த.மா.கா சென்றது சற்று அதிர்ச்சியான விஷயமே என்றாலும், பல அரசியல் வல்லுனர்களும் இதனை முன்னரே சரியாக கணித்திருந்தனர்.
தொகுதி பங்கீடு
கூட்டணி உறுதியானதை தொடர்ந்து, இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், 4 மக்களவை இடமும் ஒரு மாநிலங்களைவை இடமும் கோரப்பட்டுள்ளது.
கூட்டணியில் இன்னும் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை பாஜகவே உறுதிசெய்திட நிலையில், த.மா.கா'வின் இந்த கோரிக்கைக்கு பாஜக உடன்படுமா..? என்ற சந்தேகமும் இருக்கின்றது.
முன்னதாக கூட்டணிக்கு வரவிற்கும் ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரனிடம் தாமரை சின்னத்தில் நிற்கும் படி, பாஜக நிபந்தனை வைத்ததாக கூறப்படும் நிலையில், அதே நிபந்தனையை த.மா.கா கட்சியிடமும் பாஜக வைத்திருக்குமா..? அதற்கு த.மா.கா சம்மதிக்குமா..? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.