மியான்மரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தமிழர்கள்
மியான்மரில் பியூ ஷா தி எனும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் இரண்டு தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர் நாட்டில் செயல்படும் பியூ ஷா தி எனும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த குழுவால் இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மரில் பயங்கரம்
சுட்டுக்கொல்லப்பட்ட 2 தமிழர்களும் மணிப்பூரில் வசித்து வந்தவர்கள். இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களின் உடலும் தற்போது மியான்மரில் உள்ள தம்மு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் சுட்டுக்கொலை
சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில், அது தொடர்பாக விசாரிப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரில் ஆட்டோ ஓட்டுநர் மோகனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது குறிப்பிடதக்கது.
இவர்கள் வசித்து வந்த பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் அப்பாவிகள் என்றும், நண்பர்களை காண தமு பகுதிக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
காஃபி ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தாரா ட்விட்டர் சிஇஓ ? : வைரலாகும் புகைப்படங்கள்