காஃபி ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தாரா ட்விட்டர் சிஇஓ ? : வைரலாகும் புகைப்படங்கள்

Twitter London Viral Photos
By Irumporai Jul 04, 2022 09:37 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உலகின் சமூக வலைத்தளங்களின் ஜாம்பவானான ட்விட்டர் நிறுவனத்தில் சிஇஓவாக உள்ள பராக் அகர்வால்,  காபி ஷாப்பில் ஆர்டர் எடுப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

காபிஷாப்பில் பாரக் அகர்வால்

2011-ல் ட்விட்டரில் சாதாரண ஊழியராக வேலையில் சேர்ந்தபராக். தனது தனி திறமையினால்  கடந்த ஆண்டு முதல் சிஇஓ பதவியிலிருந்து வருகிறார். இதற்கிடையில் பராக் அகர்வால் தங்கள் நிறுவனத்தின் இங்கிலாந்து அலுவலகத்துக்குக் கடந்த வாரம் சென்றுள்ளார்.

அப்போது அங்கு உள்ள காபி ஷாப் ஒன்றில் ஆர்டர் எடுப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

வைரலாகும் புகைப்படம்

அதில், பாரக் அகர்வாலுடன்,ட்விட்டர் நிறுவனத்தின் மற்றொரு உயர்மட்ட நிர்வாகியும், நிதி அலுவலருமான நெட் சேகல் அங்கிருந்தவர்களுக்கு பிஸ்கெட்டுகள் பரிமாறும் வகையிலான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்த புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘‘ ட்விட்டர் எதிர்காலம் நிச்சயமற்றது’’ : ஊழியர்களிடம் பராக் அகர்வால் ஆதங்கம்