தமிழன்தான் உலகின் ஆதிக்குடி - ஆக்ஸ்ஃபோர்ட் அறிக்கை!
தமிழர்கள் குறித்த ஆக்ஸ்ஃபோர்ட் அறிக்கை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கற்கால கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே உள்ள சென்னனூர் கற்கால கண்டுபிடிப்புகளுக்குப் புதையல் களமாக திகழ்கிறது.
அங்கு நடத்திய ஆராய்ச்சியில், சுமார் ஒரு மீட்டரிலேயே கற்காலப் படிவுகளின் குவியல்கள் கிடைத்துள்ளன. அதில் கிடைத்த மூலக்கற்கள் மற்றும் மண் மாதிரிகள், ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.
ஆக்ஸ்ஃபோர்ட் அறிக்கை
இந்த ஆய்வகம், பண்டைய பொருட்களின் வயதை ஒளிச்சாய்வு நுட்பத்தின் மூலம் மதிப்பீடு செய்யும். அதன்படி, Optically Stimulated Luminescence எனும் நவீன தொழில்நுட்பத்தில், கற்கள் மற்றும் மண் மாதிரிகளின் காலம் துல்லியமாக கணிக்கப்பட்டது.
அந்த கற்களும் கூரிய கல் கருவிகளும் நுண்கற்காலத்தைச் சேர்ந்தவை. அந்தக் கல்லின் காலம், (கி.மு. 8450). இதன்மூலம், தமிழ்நாட்டில் கல்லறைப் பண்பாடு தொடங்கி,
வேளாண்மை சார்ந்த குடியிருப்புப் பண்பாடு வரை, மக்களின் பரிணாம வளர்ச்சியை துல்லியமாகத் தெளிவாக வரையறுக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.