நாய்களை ஒழித்தால் பிளேக் நோய் வரும் - சீமான் கொதிப்பு!
நாய்களை முற்றிலுமாக ஒழித்தால் பிளேக் நோய் வரும் என சீமான் தெரிவித்துள்ளார்.
தெருநாய்கள் விவகாரம்
சென்னையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தெரு நாய்களை அழிக்க கூடாது, அழித்தால் பிளேக் நோய் பரவும். அதனால் அழிக்காமல் சமநிலைப் படுத்துதல் வேண்டும். அரசு முறையாக அணுகி நடவடிக்கை எடுக்க வேண்டும் , முறையாக தடுப்பூசிகள் போட வேண்டும்.
திண்டிவனத்தில் பெண் கவுன்சிலர் பட்டியலின மக்களை காலில் விழ வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் இவ்வளவு கல்வி அறிவு பெற்றும் இப்பொழுதும் இதுபோன்று நடப்பதை பார்த்து நாம் எல்லோரும் வெட்கித் தலை குனிய வேண்டும்.
சீமான் கருத்து
இதை ஒழிக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இது செல்லாமல் தடுக்க வேண்டும். இங்கு கல்வி அறிவையும் ஒழுக்கத்தையும் போதிக்கவில்லை மாறாக அது வர்த்தக அறையாக மாறி உள்ளது. எங்களது ஆட்சியில் இது போன்ற செய்பவர்களுக்கு அரசின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்.
காவல்துறை நாம் தமிழர் கட்சியின் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறது. காவல்துறை போராடும் மக்களின் பிரச்சினைகளை கேட்டு அதை தீர்த்து விடும் இடத்தில் இல்லை. அரசு தான் அதை செய்ய வேண்டும், ஆனால் காலம் கடத்தி சென்று விடுகிறது.
30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் பாஜக அரசு. அந்த சட்டத்தை நிறைவேற்றினால் கொண்டு வருபவர்கள் பதவியில் இருப்பார்களா? இது சும்மா மடைமாற்ற அரசியல்” என தெரிவித்துள்ளார்.