அதிமுக பொதுச்செயலாளர் பதவி - நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர்
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதேவேளை சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்ற தீர்ப்பு
தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது.
எனவே, இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தற்போது இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.