பாஜக கூட்டணியில் இருந்து அமமுக விலகல் - டிடிவி தினகரன்

Tamil nadu ADMK BJP TTV Dhinakaran
By Sumathi Sep 03, 2025 04:14 PM GMT
Report

அமமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக விலகல்

காட்டுமன்னார் கோவிலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்கவில்லை.

ttv dhinakaran

என்டிஏ கூட்டணியில் துரோகம் தலைவிரித்து ஆடுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் ஏற்கனவே வெளியேறிய நிலையில் தற்போது டிடிவி தினகரனும் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதகமான விஜய் அரசியல் வருகை; மீண்டும் திமுகதான் - கருத்து கணிப்பில் தகவல்!

சாதகமான விஜய் அரசியல் வருகை; மீண்டும் திமுகதான் - கருத்து கணிப்பில் தகவல்!

டிடிவி தினகரன் அறிவிப்பு

முன்னதாக தென்காசியில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “2026 சட்டமன்றத் தேர்தலில் அமமுக யார் என்பதை உறுதியாக நிரூபிப்போம். கருத்துக்கணிப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும்.

பாஜக கூட்டணியில் இருந்து அமமுக விலகல் - டிடிவி தினகரன் | Ammk Left From Nda Alliance Says Ttv Dhinakaran

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரியவரும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எத்தனை அணிகள்,

எந்தெந்தக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இடம் பெறுகிறது என்பதும் வரும் டிசம்பர் மாதம் தெரியவரும் என தெரிவித்திருந்தார்.