தமிழகத்தில் வெளுக்க போகும் பேய் மழை -19 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

Tamil nadu TN Weather Weather
By Vidhya Senthil Oct 25, 2024 03:23 AM GMT
Report

  தமிழகத்தில், 19 மாவட்டங்களில், இன்று(அக்.,25) கனமழைக்கான மஞ்சள் 'அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான, 'டானா' புயல், படிப்படியாகவலுவடைந்து, தீவிர புயலாக மாறியுள்ளது. இது, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா -மேற்கு வங்காளம் இடையே, பூரி - சாகர் தீவுகளுக்கு இடையில், இன்று காலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும்.

yellow alert

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய, வளி மண்டல சுழற்சி அரபிக்கடல் நோக்கி நகர்ந்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய லட்சத்தீவு கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ட்ரெக்கிங் செல்பவரா நீங்கள்? தமிழக அரசின் மலையேற்ற திட்டம் - முன்பதிவு செய்வது எப்படி?

ட்ரெக்கிங் செல்பவரா நீங்கள்? தமிழக அரசின் மலையேற்ற திட்டம் - முன்பதிவு செய்வது எப்படி?

வரும், 30ம் தேதி வரை மழை தொடர வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலுார், அரியலுார், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 மஞ்சள் 'அலர்ட்' 

இதற்கான, 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

chennai rain 

டானா' புயல் வலுவடைந்து வருவதால், மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று மணிக்கு 110 முதல், 115 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.