மீண்டும் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

Tamil nadu
By Vidhya Senthil Oct 20, 2024 03:20 AM GMT
Report

 மத்திய அந்தமான் கடல்பகுதியில் 5.8 கிமீ உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

 அந்தமான் கடல் பகுதியில் 21-ம் தேதி (நாளை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Low pressure area

தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்துசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

சுனாமி போல் பொங்கிய கடல் அலை..வீடுகளில் புகுந்த தண்ணீர் - கடும் அவதியில் மக்கள்!

சுனாமி போல் பொங்கிய கடல் அலை..வீடுகளில் புகுந்த தண்ணீர் - கடும் அவதியில் மக்கள்!

இதன் காரணமாக, அக்டோபர் 20, 21, 24-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 22, 23, 25-ம் தேதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எச்சரிக்கை

இன்று (அக். 20) தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும், நாளை (அக்.21) கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

chennai rain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.