சென்னையில் மீண்டும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி - வீராங்கனைகளின் பட்டியல் வெளியீடு

Tennis Tamil nadu
By Nandhini Aug 19, 2022 07:31 AM GMT
Report

சென்னையில் மீண்டும் ஒரு சர்வதேச போட்டி நடத்த தயாராகி வருகிறது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் கடந்த 28ம் தேதி தொடங்கி கடந்த 10ம் தேதி முடிவடைந்தது. செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சென்னை வந்து கலந்து கொண்டனர்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் நடைபெற்றது.

ரூ.1 கோடி பரிசுத் தொகை

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய ஏ அணி’ வீரர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 1 கோடிக்கான காசோலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னையில் மீண்டும் ஒரு சர்வதேச போட்டி

ஏடிபி டென்னிஸ் போட்டி தலைநகர் சென்னையில் 1997ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 21 ஆண்டுகள் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஏடிபி ஆண்கள் டென்னிஸ் போட்டி 2018ம் ஆண்டு புனேவிற்கு மாற்றப்பட்டது.

சமீபத்தில் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த டென்னிஸ் போட்டியையும் வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து, சென்னையில் முதல்முறையாக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது.

நுங்கம்பாக்கத்தில் வரும் செப்டம்பர் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர், தமிழ்நாடு டென்னிஸ் சங்க செயலாளர் பிரேம் குமார் உள்ளிட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் 45 முதல் 50 நாடுகளிலிருந்து டென்னிஸ் வீரர்கள் சென்னை வர உள்ளனர். மகளிர் டென்னிஸ் தர வரிசையில் டாப் 100 முதல் 150 வரை உள்ள வீராங்கனைகள், தகுதிச் சுற்றி நடத்தப்பட்டு, மொத்தம் 32 வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.

tamilnadu-womens-tennis-tournament

வீராங்கனைகளின் பட்டியல் வெளியீடு

சென்னை நுங்கம்பாக்கத்தில் டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள போட்டியில் மொத்தம் 32 வீராங்கனைகளில் 21 பேர் நேரடியாக தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அமெரிக்க வீராங்கனை ஆலிசன் ரிஸ்கி, பிரான்ஸ் வீராங்கனை எலிஸ், ஜெர்மனி வீராங்கனை தாதட்ஜனா மரியா, 15 வயதான செக் குடியரசு வீராங்கானை லின்டா உள்ளிட்டோர் அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர்.