சென்னையில் மீண்டும் ஒரு பிரமாண்டம்….வரலாற்றில் முதல்முறையாக சர்வதேச டென்னிஸ் போட்டி...!

M K Stalin Chess Tennis 44th Chess Olympiad
By Nandhini Aug 17, 2022 07:54 AM GMT
Report

சென்னையில் மீண்டும் ஒரு சர்வதேச போட்டி நடத்த தயாராகி வருகிறது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் கடந்த 28ம் தேதி தொடங்கி கடந்த 10ம் தேதி முடிவடைந்தது. செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டனர். போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடந்து வந்தது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் நடைபெற்றது.

chess

ரூ.1 கோடி பரிசுத் தொகை

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய ஏ அணி’ வீரர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 1 கோடிக்கான காசோலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

chess

சென்னையில் மீண்டும் ஒரு சர்வதேச போட்டி

ஏடிபி டென்னிஸ் போட்டி தலைநகர் சென்னையில் 1997ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

21 ஆண்டுகள் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஏடிபி ஆண்கள் டென்னிஸ் போட்டி 2018ம் ஆண்டு புனேவிற்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த டென்னிஸ் போட்டியையும் வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து, சென்னையில் முதல்முறையாக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. நுங்கம்பாக்கம் வரும் செப்டம்பர் 12ம் தேதி 18ம் தேதி வரை டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சர், தமிழ்நாடு டென்னிஸ் சங்க செயலாளர் பிரேம் குமார் உள்ளிட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் 45 முதல் 50 நாடுகளிலிருந்து டென்னிஸ் வீரர்கள் சென்னை வர உள்ளனர். மகளிர் டென்னிஸ் தர வரிசையில் டாப் 100 முதல் 150 வரை உள்ள வீராங்கனைகள், தகுதிச் சுற்றி நடத்தப்பட்டு, மொத்தம் 32 வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். 

tennis - tamilnadu