விஜய்யை கைது செய்; மாணவர்கள் கொந்தளிப்பு - நெருக்கடியில் தவெக!
விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் சங்கம் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
விஜய் கைது?
கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் கரூரில் கரூர் கோவை சாலை, ஈரோடு சாலை, வேலுசாமிபுரம், காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பு போஸ்டர்கள்
அதில், ‘தமிழக அரசே அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக் குற்றவாளி என கைது செய் - தமிழ்நாடு மாணவர் சங்கம்' என அச்சிடப்பட்டுள்ளது.
அருணா ஜெகதீசன் சம்பவம் நடந்த இடத்தில் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார். சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆன நிலையில் இன்று வரை விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை.
முன்னதாக பத்திரிகையாளர்கள், விஜய் கைது செய்யப்படுவரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், விசாரணை ஆணையம் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.