ஒருவழியாக மெளனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா; சிபிஐ விசாரணை - பரபரப்பு பதிவு!
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க ஆதவ் மனு சமர்பித்துள்ளார்.
கரூர் துயரம்
கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இந்த பிரச்சாரத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக,
சிபிஐ விசாரணை கோரி தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘தமிழக வெற்றி கழகம் நடத்திய பிரச்சாரத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரை சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும்.
ஆதவ் அர்ஜுனா மனு
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க, தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி வழங்க வேண்டும். அதற்கு காவல் துறை எந்த தடையும் விதிக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் "பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இல்லை.
இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்ட ள்ளேன். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. இறுதியில் தர்மமே வெல்லும்!' என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.