தரவரிசையில் முதலிடம்..கல்வி மையமாக தமிழகம் ஜொலிக்கிறது - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

M K Stalin Tamil nadu Social Media
By Swetha Aug 13, 2024 09:30 AM GMT
Report

இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் ஜொலிக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் பெருமிதம்

கல்வி நிறுவனங்களின் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அதில், சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. சென்னை ஐஐடி, ஒட்டுமொத்த பிரிவில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

தரவரிசையில் முதலிடம்..கல்வி மையமாக தமிழகம் ஜொலிக்கிறது - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | Tamilnadu Shining As A Educational Hub Of India

இந்த நிலையில், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் கூறியதாவது, இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது.

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? முக்கிய முடிவெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? முக்கிய முடிவெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகம் ஜொலிக்கிறது

NIRF தரவரிசையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட மிகவும் முன்னணியில் இருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் உள்ள திராவிட மாடலுக்கு இது பெருமையான தருணம்.

தரவரிசையில் முதலிடம்..கல்வி மையமாக தமிழகம் ஜொலிக்கிறது - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | Tamilnadu Shining As A Educational Hub Of India

நான்முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களால், நமது மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.