ரேஷன் கடைகளின் நேரம் மாற்றம்; விரைவில் அறிவிப்பு - முக்கிய தகவல்!

Tamil nadu
By Sumathi May 23, 2024 05:58 AM GMT
Report

ரேஷன் கடைகள் நேரம் மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரேஷன் கடைகள்

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.

ரேஷன் கடைகளின் நேரம் மாற்றம்; விரைவில் அறிவிப்பு - முக்கிய தகவல்! | Tamilnadu Ration Shops Timing Changes

அந்த கடைகள், சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 மணி முதல் பகல், 12:30 மணி வரையும்; பிற்பகல், 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரையும் செயல்படுகின்றன. பிற மாவட்டங்களில் காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரையும் செயல்படுகின்றன.

ரேஷன் கடைகள் ஞாயிற்றுக் கிழமை இயங்கும் - அதிரடி அறிவிப்பு!

ரேஷன் கடைகள் ஞாயிற்றுக் கிழமை இயங்கும் - அதிரடி அறிவிப்பு!

நேரம் மாற்றம்

இதில், ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு, 2:30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை,

ரேஷன் கடைகளின் நேரம் மாற்றம்; விரைவில் அறிவிப்பு - முக்கிய தகவல்! | Tamilnadu Ration Shops Timing Changes

சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயர் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.