ரேஷன் கடைகள் ஞாயிற்றுக் கிழமை இயங்கும் - அதிரடி அறிவிப்பு!
அனைத்து நியாயவிலைக் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியாயவிலை கடைகள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து, நியாய விலைக் கடை பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக விண்ணப்பங்களையும், டோக்கன்களையும் விநியோகம் செய்து வருகின்றனர்.
விடுமுறை?
இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து நியாயவிலை கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று உணவுத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஈடாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.