எச்சரிக்கை: லட்சத்தீவு பகுதியில் வளிமண்டல சுழற்சி - அடுத்த 7 நாட்களுக்கு மழைதான்!
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதனால் பாதிப்புகள் மிகவும் மோசமாக இருந்தது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, கடந்த 17,18ஆம் தேதிகளில் தென்தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. தனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
ஆய்வு மையம் எச்சரிக்கை
வளிமண்டல சுழற்சியானது இன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன்பின், 22.12.2023 முதல் 25.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.