இன்னும் 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு
சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும், நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.