தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் - சிவ்தாஸ் மீனா நியமனம்
தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவ்தாஸ் மீனா
திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றது. அன்றே தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு ஐஏஏஸ் நியமனம் செய்யப்பட்டார். தற்போது அவருக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால் நாளையுடன் ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனாவை, தமிழகத்தின் 49வது தலைமைச் செயலராக அர்சு நியமனம் செய்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் சிவ்தாஸ் மீனா.
புதிய தலைமை செயலாளர்
ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் நன்கு அறிந்தவர். தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரம் உதவி கலெக்டராக (பயிற்சி) பணியைத் தொடங்கியவர், கோவில்பட்டி உதவிக் கலெக்டர், வேலூர் கூடுதல் கலெக்டர், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து பொறுப்புகளை வகித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.