ரூ.1000 கிடைக்கவில்லையா? மகளிர் உரிமைத்தொகைக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமை தொகை குறித்த அப்டேட்டை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் சுமார் 1 கோடியே 34 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.
இதில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் 9000 கோரிக்கை முகாம்கள் நடைபெறும் எனவும், அப்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக தகுதியுள்ள மகளிர் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அமைச்சர் தகவல்
இந்நிலையில் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் அப்டேட் கொடுத்துள்ளார். மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும், ஒரு சிலர் விடுபட்டிருக்கின்றனர்.
அப்படி உள்ளவர்களுக்கு முதல்வர் ஒரு வாய்ப்பு தருகிறார். ஜூன், 4ஆம் தேதி மனுக்கள் வாங்க சொல்லி இருக்கின்றார். முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.