இந்தா ஸ்டார்ட் ஆகிருச்சுல்ல.. இனி வெளுக்கப் போகும் கனமழை - எச்சரிக்கை!

Tamil nadu TN Weather Weather
By Sumathi Dec 25, 2022 05:42 AM GMT
Report

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலின் தென்மேற்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை   

இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக்கூடும்.

இந்தா ஸ்டார்ட் ஆகிருச்சுல்ல.. இனி வெளுக்கப் போகும் கனமழை - எச்சரிக்கை! | Tamilnadu Heavy Rain Fall Occurs Next 4 Days

25.12.2022 :

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

26.12.2022 :

புதுவை, தென் தமிழக மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

27.12.2022 & 28.12.2022:

தமிழ்நாடு. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28.12.2022:

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள். லட்சத்தீவு பகுதிகளில்' சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.