தமிழகத்தில் இந்த வகை கொரோனா தான் உறுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
தமிழகத்தில் XBB வகை கொரோனா தான் உறுதியாகி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
XBB கொரோனா
புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தினமும் 10க்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதாகவும், தமிழ்நாட்டில் XBB வகை கொரோனா தான் உறுதியாகி வருகிறது.
பாதிப்பு
BA5 கொரோனாவின் உள் வகையான BF7 வகை கொரோனா தான் சீனாவில் பாதிப்புகள் அதிகமாக காரணமாக உள்ளது என பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்கு 72 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோன சிகிச்சைக்கக மருந்துகள் போதியளவு கையிருப்பில் உள்ளது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தல் பேரிலும் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.