விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பதை அடுத்து உலக நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்
புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
மேலும், தமிழக விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
கொரோனா தடுப்பூசி இல்லை
தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் ஏதும் கையிருப்பில் இல்லை. மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிகள் தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை.
தமிழ்நாட்டிலே ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு உள்ளது. கடந்த 6 மாதங்களாக கொரோனா வைரசுக்கு எந்த உயிரிழப்பும் இல்லை” என்றார்.