மக்களே உஷார்...வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் - சுகாதாரத்துறையின் முக்கிய எச்சரிக்கை !

Tamil nadu Government of Tamil Nadu Office of Public Health
By Swetha May 16, 2024 04:04 AM GMT
Report

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

டெங்கு காய்ச்சல் 

தமிழகத்தில் இந்த கோடை காலம் காரணமாக கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது,தற்போது சற்று தணிந்து மழை பெய்யவும் தொடங்கியுள்ளது . இந்நிலையில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களே உஷார்...வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் - சுகாதாரத்துறையின் முக்கிய எச்சரிக்கை ! | Tamilnadu Health Department Warns About Dengue

அதன்படி, திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு - பொதுமக்கள் அச்சம்

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு - பொதுமக்கள் அச்சம்

சுகதுரத்துறை

மேலும் , இது குறித்த அறிக்கையில், ”பருவமழை மற்றும் பருவமழைக்கு பிந்தைய காலத்தில், நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் காய்ச்சல் அறிக்கைகள் சேகரிக்கப்பட வேண்டும்.

மக்களே உஷார்...வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் - சுகாதாரத்துறையின் முக்கிய எச்சரிக்கை ! | Tamilnadu Health Department Warns About Dengue

அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் மருந்துகள், நோய் கண்டறிதல், மருத்துவ கருவிகள் படுக்கைகள் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டெங்கு கொசு உற்பத்தி நடைபெறும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது .

டெங்குவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, தேவையான ரத்தத் தட்டணுக்கள், நோய் கண்டறியும் கருவிகள், மருந்துகள் போன்றவை போதுமான அளவில் இருப்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.