சென்னையில் அமைகிறது முதல் உலகளாவிய திறன் மையம் - முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

M K Stalin Tamil nadu Chennai United States of America
By Karthikraja Sep 04, 2024 07:30 AM GMT
Report

சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்க அமெரிக்க நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்டாலின் அமெரிக்க பயணம்

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். 

mk stalin in us

சான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள கூகிள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற பிரபல நிறுவனங்களுக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. 

அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க காரணம் இதுதான் - முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க காரணம் இதுதான் - முதல்வர் ஸ்டாலின்

உலகளாவிய திறன் மையம்

இதனையடுத்து நேற்று இரவு சான் ஃபிரான்ஸிஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு சிகாகோ சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிகாகோ நகரிலும் சில நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

இதன் படி அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அஷ்யூரன்ட் நிறுவனம் (Assurant, Inc.) பார்ச்சூன் 500 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும்.

ஈட்டன் நிறுவனம்

மேலும், 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் தற்போதுள்ள ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை (Global Utility Engineering Centre) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

ஈட்டன் கார்ப்பரேஷன் (Eaton Corporation) நிறுவனம் என்பது தரவு மையம், இயந்திர கட்டிடம், குடியிருப்பு, விண்வெளி மற்றும் இயக்க சந்தைகளுக்கான உற்பத்தி மற்றும் பகிர்மான பணிகளை மேற்கொள்ளும் மேலாண்மை நிறுவனமாகும். உலகளவில் 35 நாடுகளில் 208 இடங்களில் உற்பத்தி வசதி கொண்ட பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.