அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க காரணம் இதுதான் - முதல்வர் ஸ்டாலின்

M K Stalin Tamil nadu United States of America
By Karthikraja Sep 01, 2024 07:30 AM GMT
Report

அமெரிக்காவில் இருந்து நிறைய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கூகிள் மைக்ரோசாப்ட் போன்ற பிரபல நிறுவனங்களுக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

stalin in us

இந்நிலையில் இன்று சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அந்த உரையில், இனிய இந்திய சொந்தங்களின் முகங்களை பார்க்க வந்துள்ளேன். அமெரிக்காவில் அதிகமாக குடிபெயர்ந்தவர்கள் எண்ணிக்கையில் இந்திய மக்கள் 2 ஆவது இடத்தில் உள்ளார்கள். அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் இந்திய வம்சாவளிகள் உள்ளனர். 

கூகுள், ஆப்பிள் அதிகாரிகளுடன் முதல்வர் பேச்சுவார்த்தை - தமிழகத்தில் முதலீடு!

கூகுள், ஆப்பிள் அதிகாரிகளுடன் முதல்வர் பேச்சுவார்த்தை - தமிழகத்தில் முதலீடு!

சான் பிரான்சிஸ்கோ

சான் பிரான்சிஸ்கோவில் இருக்கிறேனா, சென்னையில் இருக்கிறேனா என்று சந்தேகப்படுகிற அளவிற்கு தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வு உள்ளது. 1971 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வந்தார், அவரது மகனான நானும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு இப்போது அமெரிக்காவுக்கு வந்திருக்கிறேன். 

[

உலகின் மதிப்பு மிக்க அமெரிக்க நாட்டில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களான உங்களை பார்க்கும்போது எனக்குப் பெருமையாவும், மகிழ்ச்சியாவும் இருக்கிறது. உலகத்தில் எந்த நாடாக இருந்தாலும் அது இந்தியர் இல்லாத நாடாக இருக்காது. இந்தியர்கள் வாழுகிற நாடாகத்தான் உலகின் எல்லா நாடுகளும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அமெரிக்கா என்பது இந்தியர்களை ஈர்க்கிற நாடாக எப்போதுமே இருந்திருக்கிறது.

தமிழ்நாடு

உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா இருக்கிறது என்றால், 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமான நட்பு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருப்பதுதான் இதற்கு காரணம்.

கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனங்கள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய வம்சாவளி மக்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்களை தூண்ட வேண்டும்.

ஒரு செடியையோ, மரத்தையோ ஒரு இடத்திலிருந்து எடுத்து இன்னொரு இடத்தில் நட்டால் எல்லா செடியும் மரமும் அங்கு வளருவது இல்லை. ஆனால், நீங்கள் எல்லோரும் நாடுகள் கடந்து வந்திருந்தாலும் மிக மிக சிறப்பாக வளர்ந்திருக்கிறீர்கள்.இது தான் நம்முடைய இந்தியருடைய பெருமை. இது தான் அமெரிக்காவின் வளம்" என பேசியுள்ளார்.