பொங்கல் பரிசுக்கான டோக்கன் வீடு, வீடாக விநியோகம் - எப்போது தெரியுமா?

Thai Pongal M K Stalin Tamil nadu
By Sumathi Dec 25, 2022 10:24 AM GMT
Report

பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் வீடு, வீடாக விநியோகிக்கப்பட உள்ளது.

டோக்கன் விநியோகம்

பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை ஜனவரி 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அதைதொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பொது மக்களுக்கு வழங்க உள்ளனர்.

பொங்கல் பரிசுக்கான டோக்கன் வீடு, வீடாக விநியோகம் - எப்போது தெரியுமா? | Tamilnadu Govt Pongal Gift Token Distribution

இதற்கிடையில், பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே வரும் 27ம் தேதி முதல் 28ம் தேதி வரை பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவரின் கைரேகைப் பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு கிடைக்கும். ரூ. 1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கப்பட உள்ளது.