பொங்கல் பரிசு தொகுப்பில் இந்த பொருட்கள் எல்லாம் இனி கிடையாது - இன்று வெளியாகிறது அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை அடுத்து ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பை அரசு வழங்கி வருகிறது.
இதையடுத்து இந்தாண்டும் பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலேசானையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆலேசானை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
ஆலேசாணை கூட்டத்தில் பொங்கல் தொகுப்பில் இருந்து சில பொருட்களை நீக்கலாம் என அதிகாரிகள் யோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பொருட்களின் விவரம்
இந்த நிலையில் பொங்கல் தொகுப்புடன் குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்க முடிவு செய்ய உள்ளதாக தகவல். சென்ற ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் இருந்த பொருட்களின் விவரம் பின் வருமாறு;
பச்சரிசி- 1 கிலோ
வெல்லம்- 1 கிலோ
முந்திரி- 50 கிராம்
திராட்சை- 50 கிராம்
ஏலக்காய்- 10 கிராம்
பாசி பருப்பு- 500 கிராம்
ஆவின் நெய் - 100 கிராம்
மஞ்சள் தூள் - 100 கிராம்
மிளகாய் தூள் - 100 கிராம்
மல்லி தூள் - 100 கிராம் ஆகியவை வழங்கப்பட்டது.