இனி பைக் டாக்ஸிக்கு தடையா? - தமிழக அரசு அதிரடி உத்தரவு

Tamil nadu Government of Tamil Nadu
By Karthikraja Dec 11, 2024 06:03 AM GMT
Report

பைக் டாக்ஸி ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பைக் டாக்சி

தமிழ்நாட்டில், பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்தை தவிர்த்து, பேருந்து வழித்தடம் இல்லாத பகுதிகளுக்கு செல்லவோ, அவசர காலத்தில் விரைந்து செல்லவோ பொதுமக்கள் ஆட்டோவை பயன்படுத்தி வந்தனர். 

bike taxi ban chennai

ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் அதற்கு தீர்வாக சென்னை போன்ற பெரு நகரங்களில் பைக் டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது. 

இனி சென்ட்ரல் டூ கிளாம்பாக்கம் 20 நிமிஷம் - சென்னைக்கு வரும் ஏர் டாக்சி

இனி சென்ட்ரல் டூ கிளாம்பாக்கம் 20 நிமிஷம் - சென்னைக்கு வரும் ஏர் டாக்சி

ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு

தனி நபர் பயணம் செய்வதாக இருந்தால், பெரும்பாலும் பைக் டாக்ஸியை நாட துவங்கினர். ஆட்டோ, கார்களின் பயண கட்டணத்தை ஒப்பிடும் போது பைக் டாக்ஸி பயண கட்டணம் மிகவும் குறைவு. டிராபிக்கில் சிக்கும் வாய்ப்பும் குறைவு. 

auto drivers protest

இரு சக்கர வாகனங்களுக்கு வணிக பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இதனால் தங்கள் ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர்.

நடவடிக்கை

இந்நிலையில், வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

traffic police check bike taxi chennai

விதிகளை மீறுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, கள அலுவலர்கள் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் ராபிடோ மற்றும் ஓலா போன்ற நிறுவனங்கள், பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றன. தற்போது பைக் டாக்ஸியில் பயணித்து வந்தோர் அதிக கட்டணத்தை கொடுத்து மாற்று போக்குவரத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு ஒழுங்கு படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.