ஆளுநர் ஆர்.என்.ரவி உருவப்படத்திற்கு செருப்பு மாலை - பரபரப்பு சம்பவம்!

Governor of Tamil Nadu
By Vinothini May 06, 2023 09:39 AM GMT
Report

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து அவமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆளுநர்

சமீப காலமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நடந்து வருகிறது.

திராவிடம் குறித்து விமர்சனம் செய்யும் ஆர்என் ரவி, சனாதன தர்மம் பற்றி பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார்.

tamilnadu-governor-ravi-insult

மேலும் தமிழக அரசு அனுப்பி வைக்கும் மசேதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாகவும் தமிழக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

தொடர்ந்து, சமீபத்தில் அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவமதித்தவர் மீது வழக்கு

இந்நிலையில், சேலம் மாவட்டம் பஸ் நிலையத்தில் ஆளுநரின் உருவ படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த பாஜகவினர் அங்கு சென்று அவமதித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

tamilnadu-governor-ravi-insult

தொடர்ந்து, ஆளுநர் படத்தை அவமதித்ததாக கூறி கலீல் ரஹ்மான் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் சம்பவத்தை கண்டித்து போராட்டம் செய்த பாஜகவினர் மீதும், தொண்டர்கள் 28 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.