தமிழ்நாடு சர்ச்சை : டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி

DMK BJP R. N. Ravi
By Irumporai Jan 13, 2023 03:56 AM GMT
Report

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிற்பகல், 1.30 மணிக்கு டெல்லி செல்ல உள்ளார்.

ஆளுநர் ரவி 

நேற்று ஆளுநரின் விவகாரம் தொடர்பாக டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக அரசின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர். எம்.பி டி.ஆர்.பாலு, சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோர் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.

தமிழ்நாடு சர்ச்சை : டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி | Governor R N Ravi Rushes To Delhi

டெல்லி பயணம்  

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிற்பகல், 1.30 மணிக்கு டெல்லி செல்கிறார். ஆளுநருக்கு எதிராக திமுக குடியரசு தலைவரிடம் புகார் தெரிவித்திருக்கும் நிலையில் ஆளுநரின் டெல்லி வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது. இன்று டெல்லி செல்லும் ஆளுநர், நாளை மாலை தான் சென்னை திரும்புகிறார்.