பெண் வாக்காளர்களே அதிகம் - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சாத்தி பிரத சகு வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கடந்த நவ., 9ல் துவங்கி, டிச.,9ல் நிறைவடைந்தது. ஒரு மாதம் காலம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற , விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
மொத்தம் 23 லட்சம் விண்ணப்பம்கள் பெறப்பட்டு அவற்றை ஆய்வு செய்து உரிய விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வாக்காளர் பட்டியல் தயார்செய்ய பட்டது. திட்ட மிட்டபடி அணைத்து மாவட்ட ஆட்சியர்கள் இன்று காலை 10 மணிக்கு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
6.20 கோடி வாக்காளர்கள்
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் இதில் ஆண்கள் 3.04கோடி பேரும் ,பெண்கள் 3.15 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர் 8027 பேரும்உள்ளனர் . மேலும் 3310 வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் உள்ளனர் .
அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்களும் குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் தொகுதியில் 1.71 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர் இதுவரை 60 சதவீத
வாக்காளர்கள் ஆதார் உடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர்கள் தங்களுடைய விவரங்களை https://www.elections.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் சரிபார்த்து கொள்ளலாம் என்று இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .