ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது கட்டாயமா?

By Thahir Aug 23, 2022 06:21 AM GMT
Report

ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்காவிட்டால் பெயர் நீக்கப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் அட்டை இணைப்பு 

இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தேர்தல் விதிகளின் திருத்தம் சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துக்கொள்ளலாம் என்ற அனுமதியை வழங்கியது.

இதனைத்தொடர்ந்து ஆதார் அட்டை எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை விருப்பமுள்ளவர்கள் இணைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தது.

ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது கட்டாயமா? | Is It Mandatory To Link Voter Id With Aadhaar

அதே சமயம் இந்த சட்டத்தை கட்டாயம் பின்பற்ற தேவையில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்காவிட்டால் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் மிரட்டுவதாக திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே குற்றம் சாட்டினார்.

கட்டாயமில்லை

இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், "வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான படிவம்-6பி கட்டாயம் அல்ல. விருப்பத்தின் அடிப்படையிலானது.

ஆதாரை இணைக்காத காரணத்திற்காக யாருடைய பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படாது’ என தெரிவித்துள்ளது.