தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென பற்றி எறிந்த ஏ.சி பெட்டி - அலறியடித்த பயணிகள்!
சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விரைவு ரயில்
டெல்லியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் 32 மணி பயணத்திற்கு பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 7.10 மணியளவில் வந்தடையும்,
அதன்படி, ஆகஸ்ட் 5ம் தேதி இரவு 10.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
தீ விபத்து
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் பேலம்பள்ளி அருகே வந்த போது திடீரென ரயிலின் ஏ.சி பெட்டியின் சக்கரத்தில் தீ பிடித்தது. இதனால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது, பயணிகள் அலறியடித்தப்படியே கீழே இறங்கினர்.
தொடர்ந்து, இந்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், இந்த தீ விபத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை, தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக அரை மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.