மறையாத மனிதம் : ஒடிசா ரயில் விபத்து , விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு ரத்தம் கொடுக்க குவிந்த மக்கள்
மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் பயணிகளுக்கு இரத்தம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஒடிசா ரயில் விபத்து
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்திலுள்ள பாஹாநகர் சந்தை ரயில் நிலைய பகுதியில் கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவரா நகருக்கு சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (தடம் புரண்டரயில்) மீது மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கியது.
குவிந்த பொதுமக்கள்
இந்த கோர விபத்தின் காரணமாக பாலசோர் ரயில் தடம் வழியாக செல்லக்கூடிய 7 ரயில்கள் டாடா நகர் ரயில் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும், அவ்வழியாக செல்ல இருந்த 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள்ளது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் படி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தலைமையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா விரைகின்றனர் இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் குழு ஒடிசா புறப்படுகின்றனர் .
இந்த ரயில் விபத்தில் இதுவரை இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 900 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் பயணிகளுக்கு இரத்தம் கொடுக்க பாலசோரில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.