100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்!

Tamil nadu Government of Tamil Nadu
By Jiyath May 18, 2024 05:29 AM GMT
Report

100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இலவச மின்சாரம்

தமிழகத்தில் வீட்டு இணைப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே 100 யூனிட் இலவச மின்சாரத்தை தமிழக அரசு ரத்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்! | Tamilnadu Electricity Board Explains 100 Units

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் "சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை.

ரெட்டை கதிரே.. ஒரே பள்ளியில் சேர்ந்த 8 ஜோடி இரட்டையர்கள் - அதுவும் இந்தியாவில்!

ரெட்டை கதிரே.. ஒரே பள்ளியில் சேர்ந்த 8 ஜோடி இரட்டையர்கள் - அதுவும் இந்தியாவில்!

நிறுத்தப்படமாட்டாது

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்! | Tamilnadu Electricity Board Explains 100 Units

இதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் வாயிலாக தெளிவுபடுத்தப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.