மின்கட்டணம் உயர்வு; எந்தெந்த யூனிட்டுக்கு எவ்வளவு? முழு விவரம் இதோ!
தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
மின்கட்டண உயர்வு
தமிழ்நாட்டில் வீடு, வணிக மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி, முதல் 100 யூனிட்டுக்கான இலவச மின்சாரம் தொடரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும், 400 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.4.60லிருந்து ரூ.4.80 ஆகவும், 401 முதல் 500 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.15லிருந்து ரூ.6.45ஆகவும், 501 முதல் 600 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8.15லிருந்து ரூ.8.55ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முழு விவரம்
தொடர்ந்து, 601 முதல் 800 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.9.20லிருந்து ரூ.9.65ஆகவும், 801 முதல் 1000 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.10.20லிருந்து ரூ.10.70ஆகவும், 1,000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கான மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.11.25லிருந்து ரூ.11.80ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், வணிக பயன்பாட்டு மின்கட்டணமும் 50 கி.வாட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.9.70லிருந்து ரூ.10.15ஆகவும் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோவாட்டுக்கான வாடகையும் ரூ.307லிருந்து ரூ.322ஆகவும், 112 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கான வாடகை ரூ.562லிருந்து ரூ.589ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்பு வாங்குபவர்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.