மீண்டும் மின்கட்டணம் அதிகரிப்பு? ஜூலை 1-இல் அமலுக்கு வருகிறது - தமிழ்நாடு அரசு அதிரடி
தமிழகத்தில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் மின்கட்டணம் உயர்வதாக செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மின் இணைப்பு
3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் தமிழகத்தில் உள்ளதாக குறிப்புக்கள் உள்ளது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் போன்றவற்றின் கீழ் இந்த மின் இணைப்புகள் உள்ளன.
2022ஆம் ஆண்டு ஜூலையில் மின்கட்டணம் தமிழகத்தில் உயர்த்துப்பட்டு அமலில் உள்ளது. இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுகின்றன என்ற செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவின.
இதில் ஒரு படிக்கு மேல் சென்று, மின்கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் அமலுக்கு வருவதாகவும் செய்திகள் வேகமெடுத்துள்ளன.
விளக்கம்
இது தொடர்பாக, தமிழக அரசு அதிகாரப்பூரவ விளக்கத்தை கொடுத்துள்ளது. அதில், மின் கட்டண உயர்த்தப்படுவதாக பரவும் தகவல் வதந்தி என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
2022-ஆம் ஜூலையில் வெளியான செய்தியே தற்போது மீண்டும் பகிரப்பட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டு, மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.