பதவி விலகிய கே.பாலகிருஷ்ணன்; சிபிஎம் புதிய மாநில செயலாளரான பெ.சண்முகம் - யார் இவர்?

Tamil nadu Viluppuram
By Karthikraja Jan 05, 2025 03:30 PM GMT
Report

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.

மார்க்சிஸ்ட் மாநில மாநாடு

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நேற்று முன்தினம்(03.01.2025) தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மார்க்சிஸ்ட் மாநில மாநாடு

இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பிற இடதுசாரி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். 

திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு? மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணனுக்கு முரசொலி பதிலடி

திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு? மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணனுக்கு முரசொலி பதிலடி

கே.பாலகிருஷ்ணன் விலகல்

இந்த மாநாட்டில் இன்று பேசிய கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமக்கு அடுத்த மாதம் 72 வயதாவதால் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். கட்சியின் விதிகளின் படி 72 வயதாகிறவர்களுக்கு கட்சிப் பதவிகளில் இருக்கக் கூடாது.

k balakrishnan

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 80 பேர் கொண்ட மாநில நிர்வாகக் குழு கூடி விவாதித்து, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெ.சண்முகத்தை, புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர்.

பெ.சண்முகம்

திருச்சி லால்குடியைச் சேர்ந்த சண்முகம், மாணவ பருவம் முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வருகிறார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக உள்ளார். 

பெ சண்முகம்

தருமபுரி வாச்சாத்தியில் பழங்குடி மக்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தவர் பெ.சண்முகம். கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கிய அம்பேத்கர் விருதை சண்முகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.