விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன் - முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது குறித்து தமிழக முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்று பதிவிட்டார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், வலிமைமிக்க தலைவரான தாங்கள், முக்கியமாக பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், தொற்றுக்கு ஆட்பட்டிருக்கிறீர்கள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன், விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
கோத்தபயவுக்கு இங்கே இடம் கிடையாது : இலங்கை அதிபரின் வருகைக்கு மாலத்தீவு மக்கள் எதிர்ப்பு