மருத்துவமனையில் முதல்வர் முக ஸ்டாலின்..!! திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு!!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தற்போது மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முக ஸ்டாலின்
தொடர்ந்து மக்கள் பணி, கட்சி பணி என தீவிரம் காட்டி வரும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் தான் இவருக்கு நேற்று திடீரென காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததுள்ளது. அதன் காரணமாக அவர், மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவர் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக அவருக்கு மருத்துவர்கள் சில அறிவுரைகளை தெரிவித்துள்ளனர். வைரஸ் பதிப்பின் காரணமாக முதல்வர் முக ஸ்டாலினை சிறுது நாட்கள் ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியும் உள்ளனர்.
— M.K.Stalin (@mkstalin) November 4, 2023