மழைனாலே சென்னையில் வெள்ள பயமா..? திராவிட மாடல் ஆட்சியில அது கிடையாது!! முதல்வர் பெருமிதம்!!
தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என "ஆரஞ்சு அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. இரவு முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

இருப்பினும், மாநிலத்தின் பெரிதாக எந்த இடத்திலும் மழை நீர் தேங்கவில்லை என சென்னை பெருநகர் மாநகராட்சி நிர்வாகத்தின் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை கிண்டி, ஆலந்தூர் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் 7 செ.மீ மழை பெய்துள்ளது என குறிப்பிட்டு, இருப்பினும் முதல்வரின் சிறப்பான முன்னேற்பாடு பணிகளின் காரணமாக எங்கும் மழை நீர் தேங்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் பெருமிதம்
இதனை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் முக ஸ்டாலின், சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்!
தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும்.
சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்!
— M.K.Stalin (@mkstalin) November 4, 2023
தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு… https://t.co/6DkJXObpig
மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க #DravidianModel அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்! என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan