செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Tamil nadu
By Nandhini Jul 16, 2022 06:32 AM GMT
Report

செஸ் ஒலிம்பியாட்

44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்தினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாம்மல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது.

டீசர் ரஜினிகாந்த் வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று இரவு 8 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை வெளியிட்டார்.

நெறிமுறைகள் வெளியீடு

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. வீரர்கள், தங்கும் விடுதிகள், விளையாட்டு நடைபெறும் அரங்கம், பார்வையாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

Chess-Olympiad