ஏ.ஆர்.ரகுமான் இசையில், வெள்ளை கோட் சூட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இணையத்தை கலக்கும் வீடியோ

A R Rahman M K Stalin
By Nandhini 4 மாதங்கள் முன்

செஸ் ஒலிம்பியாட்

44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்தினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாம்மல்லபுரத்தில் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது.

டீசர் ரஜினிகாந்த் வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று இரவு 8 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை வெளியிட்டார்.

இணையத்தை கலக்கும் டீசர் வீடியோ

இந்த டீசர் வீடியோவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு, ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் "வெல்கம் டூ சென்னை" என்ற வரிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளை நிற சூட்டில் வீரர்களை வரவேற்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானும் இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

m.k.stalin