2026-ம் ஆண்டில் செங்கோல் தமிழக சட்டமன்றத்தை அலங்கரிக்கும் - சபதம் எடுத்த தமிழிசை!
பாராளுமன்றத்தில் உள்ள செங்கோல் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தையும் அலங்கரிக்கும் என பாஜக மூதத்தலைவர் தமிழிசை பேசியுள்ளார்.
தமிழசை
சென்னை அடையாற்றில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பில் பொது கூட்டம் நடைப்பெற்றது. இந்த பொது கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழசை சௌந்தராஜன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர்,'' தமிழகத்தில் தொடர்ந்து அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள் . இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் சாதிக்கொரு அமைச்சர் , சாதிக்கொரு மாவட்டங்கள் என சாதியை பிரித்து ஆள்வது திமுக தான். உண்மையிலேயே சமூக நிதியை நிலைநாட்டுபவராக இருந்தால் தமிழகத்தை ஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஆளட்டும் என்று தெரிவித்தார்.
செங்கோல்
மேலும் தமிழகத்திற்கு மட்டுமே உரிய செங்கோல் தற்பொழுது டெல்லி பாராளுமன்றத்தில் அலங்கரிக்கிறது என்றால் அது தமிழ் பாராளுமன்றம் தானே என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை நீக்க என்று திமுக எம்பி வெங்கடேசன் , மாணிக் தாக்கூர் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர் ,'' நீங்கள் எல்லாம் தமிழர்களா என கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, நீங்கள் எந்த பாராளுமன்றத்தை நிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதே செங்கோல் 2026 ஆண்டு தமிழக சட்டசபையில் அலங்கரிக்கும் என்று சபதம் விடுத்தார்.