வீடு புகுந்து பெண்ணிடம் 45 லட்சம் பறிப்பு - கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி!
பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பாஜக நிர்வாகி ஒருவர் 45 லட்சம் பறித்தது மட்டுமன்றி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல்
சென்னை அம்பத்துர் பகுதியை சேர்ந்தவர் நாராயணி என்ற பெண், இவர் தனது 3 சகோதரிகள் தங்களுக்கு சொந்தமான கொரட்டூரில் உள்ள தனது 78 சென்ட் நிலத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
அது சுமார் ரூ.5 கோடி மதிப்பு கொண்ட நிலம், இதனை விற்பது தொடர்பாக சில சிக்கல்கள் இருந்தது.
அதை தீர்த்து வைத்து இடத்தை விற்று கொடுப்பதற்காக கமிஷன் அடிப்படையில் பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் என்பவரை அணுகியுள்ளார்.
அப்பொழுது வேறு ஒருவர் நல்ல விலைக்கு கேட்டதால் அதனை ஒப்புக்கொண்டு விற்றனர்.
போலீசார் அதிரடி
இந்நிலையில், ஆத்திரமடைந்த மிண்ட் ரமேஷ், அவரது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் உடன் சேர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
அப்பொழுது அவரிடம் 45 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறுப்படுகிறது.
இதனை அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். மேலும், இது குறித்து ஆவடி காவல் ஆணையர் அருண், தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அதில் அவர், "ஆவடி காவல்சரகத்திற்குட்பட்ட மக்களை அச்சுறுத்தி அமைதிக்கு குந்தகம் விளைவிக்க யார் முயற்சித்தாலும், எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.