விஷச்சாராய விவகாரம் : தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது
செங்கல்பட்டு அருகே விஷச்சாராயம் வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகி விளம்பூர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார்.
விஷச்சாராய விவகாரம்
விஷச்சாராயம் வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி விஜயகுமார் பிடிபட்டார். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவர் விஜகுமாரை கைது செய்து சித்தாமூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே விஷச்சாராய வழக்கில் அம்மாவாசை, ராஜேஷ், வேலு, நரேன், சந்துரு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த நிலையில், விஷச்சாராயம் வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகி விளம்பூர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார்.
பாஜக நிர்வாகி கைது
விஷச்சாராய வழக்கில் சிக்கிய விஜயகுமார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விஜயகுமார் நீக்கப்படுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. விஜயகுமாரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக மாவட்ட தலைவர் மோகனராஜா அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.