தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? - முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை..!
தமிழகத்தல் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2069 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்ந நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் உயர்ந்துள்ளது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலாளர்களுடன் காலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த ஆலோசனையில் கொரோனா தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று முக்கிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
கருமுட்டை விவகாரம் - சிறுமி தற்கொலை முயற்சி.. நாட்டை உலுக்கிய சம்பவம்!