நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Tamil nadu TASMAC
By Sumathi Jun 21, 2023 07:32 AM GMT
Report

நாளை முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 500 டாஸ்மாக் கடை

தமிழ்நாட்டில் 500 சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அரசாணையும் வெளியாகியுள்ளது.

நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! | Tamilnadu 500 Tasmac Shops To Be Closed

அதில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசு அறிவிப்பு

அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாளிட்ட அரசாணை எண்.140, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.

நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! | Tamilnadu 500 Tasmac Shops To Be Closed

அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.6.2023 முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.