தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான் : உச்சம் தொட்ட மதுபான விலை குடிமகன்கள் ஷாக்!
தமிழகத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. கொரனோ பாதிப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்படிருந்த நிலையில், தற்போது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மது விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தி இருப்பது மது பிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடைசியாக கடந்த மே மாதம் விலை உயர்த்தப்பட்டது.
சாதாரண வகை மது பாட்டிலின் விலை 10 ரூபாயும் ப்ரீமியம் வகை மது பாட்டிலில் விலை 20 ரூபாயுன் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வெளிநாட்டு மதுபானங்களின் குறைந்த ரக விலை 10 ரூபாயும் நடுத்தர மதுபானங்கள் விலை 300 ரூபாயும் உயர்ரக மதுபானங்களின் விலை 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது பெய்லி ஐரீஷ், ஜானிவாக்கர் உள்ளிட்ட மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பொதுவாக டாஸ்மாக்குடன் ஒப்பிடும் போது தனியார் பார் மற்றும் கிளப்புகளில் மது விலை அதிகமாக இருக்கும். தற்போது டாஸ்மாக்கிலேயே மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.